Surah Al-Fathihah
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)(அல்குர்ஆன் : 1:1)
அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.(அல்குர்ஆன் : 1:2)
(அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.(அல்குர்ஆன் : 1:3)
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).(அல்குர்ஆன் : 1:4)
اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.(அல்குர்ஆன் : 1:5)
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ
நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!(அல்குர்ஆன் : 1:6)
صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْۙ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ
(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.(அல்குர்ஆன் : 1:7)